தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்.
கும்பகோணம், ஏப்.4-
தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்.
கரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் வருமானமின்றி அவதிப்பட்டுவரும் தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும்படி எம்எல்ஏ அன்பழகனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 200 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் எம்எல்ஏ அன்பழகன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய செயலாளர்கள் தமிழழகன், கணேசன், அசோக்குமார், ஆட்டோ தொமுச செயலாளர் அருண், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அனந்தராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
" alt="" aria-hidden="true" />