வேப்பூர் அருகே தீயில் எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி
வேப்பூர் அருகிலுள்ள இலங்கியனூரைச் சேர்ந்தவர் ராமசாமி, (வயது 65), இவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீ விபத்துக்குள்ளானது.
முழு வீடும் தீயில் எரிந்ததால் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது.
இது குறித்து தகவலறிந்த பால் வளத்துறை மாவட்ட சேர்மனும், நல்லூர் ஒன்றிய செயலாளருமான பச்சமுத்து தீ விபத்தில் பாத்திக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவிதொகை, நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். அப்போது வி.ஏ.ஓ, தமிழ்செல்வன், அதிமுக நிர்வாகிகள் அர்ஜூனன், கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.